gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

ஓம்நமசிவய!

திருநீற்றொளிசேர் செம்மால் போற்றி!
இருவேறுருவ ஈசா போற்றி!
உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி!
கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி!
நம்பியாண்டார்க்கருள் நல்லாய் போற்றி!
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!

திரு நீலகண்ட நாயனார்க்கு அருளிய சிவயோகியர்!

சிதம்பரத்தில் பிறந்த நீலகண்டர் சிவனடியார்களுக்கு சிறப்பாக திருவோடுகள் செய்து தொண்டாற்றினார். இளமையான அழகான மனைவியுடன் இல்லறம் இனிது நடத்தி வந்தார். ஒருநாள் சிற்றின்பத்தில் ஆவல் கொண்டு விலைமகளோடு கூடி மகிழ்ந்திருந்து வீட்டிற்கு வந்தார். அவர் மனைவி விலை மகளைக் கட்டியணைத்த கைகளால் குலமகளானத் தன்னைத் தொட வேண்டாம் இது நீலகண்டத்தின்மேல் ஆணை என்றாள். அன்று முதல் அவளைத் தொடாமல் அயலார் பெண்போலவே பார்த்து உடலுறவில்லாமலே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். எந்த மாதரையும் தொடாமல் நல்லொழுக்கம் தவறாமல் இருந்து வரும் நீலகண்டரின் ஒழுக்கத்தை உலகறியச் செய்ய ஆவல் கொண்ட பெருமான் சிவயோகியோர் வடிவில் வந்தார். தன்னிடமிருந்த திருவோட்டினைக் கொடுத்து தான் மீண்டு வந்து கேட்கும்போது தரும்படி கூறிச் சென்றார். பின்னர் அதை மறையவும் செய்தார். நீலகண்டர் திருவோடு காணாமல் கலங்க வேறு ஒரு திருவோடு செய்து தருவதாகச் சொல்லியும் சிவயோகியர் ஏற்கவில்லை. நீ திருவோட்டை உண்மையாக தொலைத்து விட்டாய் என்றால் உன் மனைவியின் கையைப் பிடித்து தாமரைத் தடாகத்தில் மூழ்கிச் சத்தியம் செய் என்று தில்லைவாழ் அந்தணர்களின் திருச்சபையில் வழக்காடினார் சிவயோகியார். நீலகண்டரை மனைவியுடன் சத்தியம் செய்ய தீர்ப்பளித்தனர். அனைவரும் தில்லை அருகில் உள்ள புலீச்சுரம் கோவில் முன் உள்ள குளக்கரையில் கூடினர். ஒரு தண்டினை எடுத்து ஒரு புறம் மனைவி பிடிக்க மறுபுறம்தான் பிடிக்க மூழ்க நினைக்கும் போது அனைவரும் மனைவியின் கரம்பற்றி மூழ்க என கூச்சலிட்டனர். தனக்கும் தன் மனைவிக்கும் ஏற்பட்ட பழைய வரலாற்றை கூறி மீண்டும் தண்டினைப் பற்றி மூழ்கி எழும்போது இளமைப் பொலிவோடும் அழகோடும் இருவரும் எழுந்தனர். ‘எம்பெருமான் பிராட்டியோடு விடைமேல் தோன்றி இந்த இளமை நீங்காது எம்மோடு சிவலோகத்தில் இருப்பீர்’ என அருள் புரிந்தார். நான் ஒரு அடியார். இளமையில் நடந்த செயல் யாரும் அறியாதது. அதை இப்போது சொன்னால் என் புகழ் கெடும் என பரத்தையர் விவகாரத்தால் மனைவியுடன் முரன்பாடு கொண்டதையும் வெளியில் தெரிய வேண்டாம் என்ற நீலகண்டர் மனத்திலிருந்த மாசினை நீக்க இறைவன் பார் அறிய சொல்ல வைத்தார்.

#####

ஓம்நமசிவய!

திணைபால் கடந்த தேவே போற்றி!
புனையாய் இடர்க்கடல் போக்குவோய் போற்றி!
பேழை வயிற்றுப் பெம்மன் போற்றி!
ஏழைக்கிரங்கும் எம்மிறை போற்றி!
அடியவர் உள்ளம் அமர்ந்தாய் போற்றி!
அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி! போற்றி!

திருநாவுக்கரசருக்கு அருளிய வடிவங்கள்-இரண்டு!

1.திருப்பைஞ்ஞீலியில் பொதிசோறளித்த அந்தணர்: சைவத் தலங்கள்தோறும் சென்/று இறைவனைத் துதித்து இனிய பாடல்களைப் பாடிவந்தார் திருநாவுக்கரசர். திருவானைக்கா, திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, திருகற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய தலங்களை வணங்கி திருப்பைஞ்ஞீலியைச் சேரும்போது பசியாலும் நீர் வேட்கையாலும் வாடினார். பெருமான் வழியில் சோலையும் குளமும் அமைத்து வழிப்போக்கர் போல் பொதி சேற்றுடன் அந்தணர் கோலத்தில் உணவு அளித்து சற்று தூரம் வந்ததும் மறைய பெருமானின் கருணையை நாவுக்கரசர் உணர்ந்தார்.

2.பனிபடர்ந்த மலையில் அப்பருக்கு அருளிய முனிவர்: திருநாவுக்கரசர் காளத்தியில் காளத்திநாதரைக் கண்டு வணங்கி திருப்பருப்பதத்தை எண்ணி மலைப்பாதைகளும் வனங்களும் கடந்து கங்கையையும் கடந்து காசியில் விஸ்வநாதரை தரிசனம் செய்தார். திருக்கயிலையைக் காண வேண்டும் என்ற வேட்கையில் கைகளும் மார்பும் தேய உடல் வருந்தும் தன்மையில் தொடர்ந்து சென்றார். பெருமான் முனிவர் வேடத்தில் தோன்றி கயிலை காண்பதற்கு அரியது. அதைக் கைவிடுக என்றார். அதை ஏற்றுக்கொள்ளாத அப்பரடிகளிடம் காட்சியளித்து இப்பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் கையிலைக் காட்சி காண்பாயாக என அருளினார். அவ்வாறே பொய்கையில் மூழ்கித் திருவையாற்றில் திருக்கயிலைக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 11:05

சுந்தரருக்கு அருளிய வடிவங்கள்-ஆறு!

ஓம்நமசிவய!

பாரதம் எழுதிய பரூஉக்கர போற்றி!
மாரதம் அச்சொடி மதவலி போற்றி!
மாங்கனி அரன்பால் வாங்கினோய் போற்றி!
ஈங்கினி எம்பால் எழுந்தருள் போற்றி!
கரும்பாயிரங்கொள் கள்வா போற்றி!
அரும்பொருளே எம் ஐயா போற்றி! போற்றி!

சுந்தரருக்கு அருளிய வடிவங்கள்-ஆறு!

1.தடுத்தாட்கொள்ளவந்த முதிய அந்தணர் வடிவம்: திருக்கயிலையில் சிவபெருமானுக்கு தொண்டு செய்து வந்த ஆலாலசுந்தரர் ஒருநாள் நந்தவனத்தில் பார்வதியாரின் தோழிகளான அநிந்திதை, கமலினி ஆகிய இருவரையும் கண்டு காதல் வயப்பட்டு இருந்தார். இதை உணர்ந்த சிவபெருமான் நீங்கள் மூவரும் பூ உலகில் பிறந்து ஒன்றுபட்டு காதல் புரிந்து உங்கள் அன்பு கனிந்து நம் தொண்டினையும் செய்து வாருங்கள் என அருளினார். அவ்வாறே திருமுனைப்பாடி நாட்டின் நாவலூர் என்ற கிராமத்தில் சடையனார்-இசைஞானியார் என்ற தம்பதியினருக்கு ஆதி சைவ அந்தணராக நம்பி ஆரூரார் என்ற பெயருடன் பிறந்து வளர்ந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். பருவம் அடைந்ததும் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியாருடைய புதல்வியை மணம் செய்ய நிச்சயத்தனர். அந்நன்னாளில் அவரை தடுத்தாட்கொள்ள பெருமான் கிழ வேதியராய் உருக்கொண்டு வந்தார். மணப்பந்தலின் முன் நின்று இந்த நம்பி ஆரூரான் என் அடிமை என்றார். ஆரூரார், ‘நான் அடிமை என்பதைக்காட்ட என்ன ஆதாரம் என்று கேட்டு வேதியர் கையிலிருந்த ஓலையை வாங்கி கிழித்தெறிந்தார். திருவெண்ணெய் நல்லூரில் வாழ்பவர் என வேதியர் கூறியதால் அனைவரும் அவ்வூர் சபையில் வழக்குப் பேசச் சென்றனர். அச்சபையில் யாரும் வழக்கை நம்பவில்லை. அப்போது வேதியர் ஆரூரான் கிழித்தது படி ஓலை. மூல ஓலை இது என அனைவரிடமும் காண்பிக்க, எல்லோரும் ஆரூரார் வேதியருக்கு அடிமை என ஒப்புக் கொண்டனர். பின் முதியவரை நோக்கி நீங்கள் இருக்குமிடம் எது எனக் கேட்க அனைவரையும் அழைத்து சென்று கோவிலுக்குள் புகுந்து மறைந்தார். பின் வானில் தோன்றி யாமே உம்மை ஆட்கொள்ள வந்தோம். எம்மை வன்மை பேசியதால் நீ வன்தொண்டன் என்றாவாய் என அருளினார்.

2.திருவதிகையில் திருவடிசூட அந்தணர் வேடம்: நம்பியாரூரர் சொல் தமிழ் பாடும் திருத் தொண்டை மேற்கொண்டு பல தலங்களுக்கும் சென்று வழிபட்டார். திருவதிகை தலம் வந்த போது அப்பரடிகள் உழவாரத் தொண்டு செய்த புண்ணிய பூமியாதலால் காலால் மிதித்தல் கூடாதென்று புறம்பே உள்ள சித்தவட மடத்தில் தங்கி உறங்கினார். பெருமான் முது வேதியராய் சென்று துயில்வார்போல் கிடந்து நம்பியாரூரார் தலைமேல் காலை நீட்டினார். பன்முறை கூறியும் மீண்டும் மீண்டும் தலைமேற் கால்வைக்க சினந்த ஆரூரார் அவர் பெருமான் என்பதை உணர்ந்தார். சுந்தரர் திருவதிகையில் முதிய அந்தணர் கோலத்தில் வந்த சிவபெருமானால் திருவடி சூட்டப் பெற்றார்.

3.திருக்கூடலையாற்றூருக்கு அழைத்துச் சென்ற வேதியர்: ஆரூரார் கவிரியின் இரு கரைத் தலங்களிலும் உள்ள சிவத் தலங்களுக்குச் சென்று இறைவனை தொழுது பாடி வழிபட்டு வந்தவர் திருக்கூடலையாறு என்ற தலத்தை விட்டுவிட்டு திருமுதுகுன்றம் எனும் தலத்தை நோக்கிச் சென்றார். எதிரில் வேதியராக வந்த பெருமானிடம் திருமுதுகுன்றத்திற்கு சொல்லும் வழியை சொல்லக் கேட்டார். இவ்வழி திருக்கூடலையாற்றூருக்குச் செல்லும் வழி எனக் குறிப்பாகச் சொல்லி உடன் வழித் துணையாக வந்து ஊரை நெருங்கியதும் மறைந்தார். அப்போது தன்னை வழிநடத்தியவர் பெருமானே என ஆரூரார் உணர்ந்தார்.

4.திருக்குருகாவூரில் பொதிச் சோறு அளித்த மறைவேதியர்: நம்பியாரூரார் சிவத்தலங்களை தரிசித்து வழிபட்டு வந்தபோது திருக்குருகாவூர் எனும் தலத்தை நோக்கித் தொண்டர் கூட்டத்துடன் செல்லும்போது பசியாலும் தாகத்தாலும் வருந்தினார். நிலையறிந்த பெருமான் நம்பி ஆரூரார் வரும் வழியில் ஓர் தண்ணீர் பந்தலை அமைத்து வேதியர் வேடத்தில் ஆரூராரை எதிர் நோக்கிக் காத்திருந்தார். ஆரூரார் வேதியரைப் பார்த்து சிவயநம எனச் சொல்லி அருகில் அமர்ந்தார். வேதியர் ஐயா நீங்கள் மிகுந்த பசியுடன் இருக்கின்றீர்கள் .இந்த பொதிச்சோறை உண்டு நீரை அருந்துங்கள் என்றார். பொதிச் சோறு அள்ள அள்ள வளர்ந்து அனைவரின் பசியைப் போக்கியது. நீரை அருந்தியதும் இறைவனைப் பாடி துதித்து உண்ட களைப்பினால் கண் அயர்ந்தனர். வேதியரும் பந்தலும் மறைந்தது. கண்விழித்த நம்பி ஆரூரார் வேதியராய் வந்தது சிவபெருமானே என உணர்ந்து பதிகம் பாடினார்.

5.திருக்கச்சூரில் உணவு இரந்து கொடுத்த அந்தணர்: நம்பியாரூரார் சிவத்தலங்களை வழிபட்டவாறு திருக்கழுகுன்றம் வந்து சிலகாலம் அங்கு தங்கி வழிபட்டு பின் திருக்கச்சூர் சென்று ஆலக்கோவிலில் இறைவனை தொழுது வழிபட்டார். அப்போது திருஅமுது செய்யும் நேரம் வந்தும் சமையற்காரர்கள் வரமையால் நம்பி ஆரூரார் பசியால் வடுவதை அறிந்த சிவபெருமான் ஒரு ஏழை அந்தணராக உருவெடுத்து திருக்கச்சூரிலுள்ள வீடுகள் தோறும் பிச்சையெடுத்து வந்து ஆரூராருக்கு நல்சோற்றையும் கறிகளையும் கொடுத்து பசியாற்றினார். உடன் இருந்த அடியவர்கள் அனைவரும் பசியாறிய பின் அந்தணர் மறைந்தார். பெருமானே தமக்காக பிச்சையெடுத்த கருணைக் கண்டு நம்பிஆரூரார் திருப்பதிகம் பாடினார்.

6.பரவையர் ஊடலைத் தீர்க்க ஆதிசைவர்: உமை விருபப்படி கமலினி திருவாரூரில் பரவையராகவும், அநிந்திதை திருவொற்றியூரில் சங்கிலியராகவும் பிறந்து வளர்ந்தனர். தினமும் தோழிகளுடன் கோவிலுக்குச் சென்று வந்த பரவையர் ஒருநாள் நம்பிஆரூராரைச் கோவிலில் சந்தித்தார். முன் வினை காரணமாக காதல் அரும்பி மறுநாள் வேதவிதிப்படி திருமணம் நடைபெற்றது. இல்லறவாழ்வு இனிது நடந்தது. ஆரூரார் தலயாத்திரையைத் தொடர்ந்து திருவொற்றியூரில் தங்கினார். ஒருநாள் வழிபாடு முடிந்தபின் மலர் தொடுக்கும் மண்டபத்திற்குச் சென்றபோது அங்கு சங்கிலியாரைக் கண்டார். காதல் கொண்டு இறைவனிடம் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டினார். உன்னைப் பிரியேன் எனச்சத்தியம் செய்து கொடுக்கத் திருமணம் நடைபெற்றது. அடியார்கள் மூலம் சங்கிலியார் திருமணச் செய்தி பரவையாருக்கு கிடைக்க துக்கமும் கோபமும் கொண்டார். சுந்தரர் சமாதனத் தூது அனுப்பியும் பலனில்லை. இறைவனிடம் பரவையாரின் ஊடலைத் தீர்த்து வைக்க வேண்டினார். சிவபெருமான் பரவையார் வீட்டிற்குச் சென்று சமாதான வார்த்தைகள் பேசியும் மன்றாடியும் பரவையர் சம்மதிக்கவில்லை. இதை அறிந்த சுந்தரர் இனி நான் உயிர் தரியேன் என இறைவன் பாதங்களில் வீழ பெருமான் மீண்டும் பரவையரிடம் தூது சென்றார். இறைவனே தூது என்பதை அறிந்த பரவையர் மனந்தெளிந்து இறைவன் விருப்பப்படி சுந்தரர் வருவதற்கு உடன் பட்டார். சுந்தரரிடம் பரவையரின் கோபம் தணிந்தது இனி அவள் மாளிகை செல்லலாம் எனச் சுந்தரரிடம் கூறி மறைந்தார்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:59

மதுரை திருவிளையாடல் வடிவங்கள்-ஏழு!

ஓம்நமசிவய!

எள்ளுருண்டை பொரி ஏற்போய் போற்றி
தள்ளுறு தெவிட்டாத் தேனே போற்றி!
மூவர் மொழியிடம் மொழிந்தாய் போற்றி
தேவர்க்கு அரிய தேவா போற்றி!
மாலுக்கு அருளிய மதகரி போற்றி!
பாலனெக் கடல்நீர் பருகினாய் போற்றி! போற்றி!

மதுரை திருவிளையாடல் வடிவங்கள்-ஏழு!

1.வாள் ஆசிரியனாக: மதுரையில் வேற்று நாட்டு முதியவர் குடியேறி தனக்குத் தெரிந்த வாள் வித்தையை இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அவரிடமிருந்து சித்தன் என்பவன் வாள் வித்தையில் வல்லமை பெற்றதால் கர்வம் கொண்டு தனியாக பயிற்சிக்கூடம் நிறுவி நிறைய பொருள் சேர்ந்ததனால் மேலும் கர்வம் கொண்டு மதுரையில் தான் மட்டுமே பயிற்சிக்கூடம் நடத்தி அதனால் வரும் பொருள் எல்லாம் தனக்கே வேண்டும் என்ற அளவிற்கு அதிகமான ஆசை கொண்டான். தன் குருநாதரை மதுரையை விட்டு வெளியே அனுப்ப திட்டமிட்டு முதியவர் வீட்டில் இல்லாத சமயம் அவர் மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தான். தன் கற்பை காப்பாற்றிக் கொண்ட அப்பெண் சொக்கநாதரிடம் முறையிட்டாள். பெருமான் வாள் பயிற்சி ஆசானக உருக்கொண்டு சித்தனுடன் வாள் போர் புரிந்து அவனுடைய அங்கங்களை வெட்டி எறிந்தார்.

2.தவசியாக தண்ணீர் பந்தல் வைத்தமை: இராசேந்திர பாண்டியனின் தம்பி இராசசிம்மனுக்கு தன் மகளை மணமுடித்து வைத்த சோழன் மனம் மாறி பாண்டிய அரசை அபகரித்து தன் மருமகனுக்கு அளித்திட எண்ணம் கொண்டு பாண்டிய நாட்டின்மீது போர் தொடுத்தான். இராசேந்திர பாண்டியன் சொக்கநாதரை வணங்கி தன்னையும் தன் நாட்டையும் காப்பாற்ற வேண்டி போருக்குச் சென்றான். கடுமையான போரில் வீரர்கள் நீரின்றி அவதிப்பட பாண்டிய சேனைக்கு உதவிட போர்க்களத்தின் நடுவே தண்ணீர் பந்தல் அமைத்து வீர்ர்களுக்கு நீர் தந்து உதவினார். தாகம் தீர்ந்ததும் பாண்டியப்படை புதிய வேகத்துடன் சண்டையிட்டு பொரில் வெற்றி பெற்றது.

3.விறகு வெட்டியாக விறகு விற்றமை: வரகுணப் பாண்டியன் ஆட்சிக்காலத்தில் வடநாட்டு யாழ்பாணன் என்ற ஏமநாதன் இசையில் பல விருதுகளைப் பெற்று சிறந்து விளங்கியவன் மதுரைக்கு வந்தான். மன்னனும் அவனுக்கு பரிசுகள் அளித்து சிறப்பித்ததால் கர்வம் மிகக்கொண்டு தன்னை மிஞ்சியவன் யாருமில்லை என்று இறுமாந்து, இந்த பாண்டிய நாட்டில் தன்னை வெல்ல யாருமில்லையா என ஆணவத்துடன் கேட்டான். மன்னன் புலவர் பாணபத்திரரை அழைத்து ஏமநாதருடன் அரசவையில் போட்டிக்கு பாட ஏற்பாடு செய்தார். ஏமநாதரின் சீடர்கள் மதுரை நகர் முழுவதும் சென்று நல்லிசையை பரப்பினர். அவர்களின் இசையைக்கேட்ட பாணபத்திரர் சீடர்களே இவ்வளவு இனிமையாகப் பாடும்போது ஏமநாதருடன் தான் எப்படி போட்டி போடுவது என்று குழப்பத்தில் ஆழ்ந்து சோமசுந்தரரிடம் முறையிட்டார். பக்தனின் குறையை நீக்க விறகு விற்பவன் போல் உருக்கொண்டு ஏமநாதன் தங்கியிருந்த வீட்டுப் புறத்திண்ணையில் அமர்ந்து தன் களைப்புத் தீர இனிய பாடல் ஒன்றைப் பாட அந்த இசையினால் கவர்ந்த ஏமநாதன், நீ யார் எனக் கேட்க! நான் பாணபத்திரரிடம் இசை கற்க வந்தேன். அவர் என்னைத் தகுதியற்றவர் எனக்கூறி ஒதுக்கி விட்டார் என்றார். பாணபத்திரரால் ஒதுக்கப்பட்ட விறகு வெட்டியே இசையில் இந்த அளவு சிறந்தவனாக இருக்கும்போது பாணபத்திரர் இசைஞானம் எப்படியிருக்கும் என அஞ்சி அன்று இரவோடு இரவாக மதுரையை விட்டு வெளியேறிவிட்டார்.

4.வலைஞராகி கடலில் மீன்வலையை வீசியமை: பெருமானின் திரு உளப்படி உமை பரதவ அரசனின் மகளாக வளர்ந்து வந்தாள். முருகன் வணிகன் தனபதியின் மகனாக உருத்திரசருமனாய் பிறந்திருந்தார். நந்திகேசுவரர் சுறாவாகி கடலை கலக்கினார். பரதவர் அனைவரும் வலை வீசி அந்த மீனைப் பிடிக்க முயற்சித்தும் அது நழுவிச் சென்றது. பரதவ அரசன் அதைப் பிடிப்பவர்க்கு தன் மகளை மணம் முடித்து தருவதாக அறிவிப்புச் செய்ததும் இறைவன் ஒரு வலைஞராக உருக்கொண்டு அந்த மீனை வலைவீசிப் பிடித்து இழுத்து கரையில் போட்டார். அறிவிப்பு செய்தபடி தன் மகளை அவருக்கு மணம் முடித்துக் கொடுத்ததும் இருவரும் மறைந்து சோமசுந்தரரும் மீனாட்சியுமாய் காட்சி கொடுத்து அருள நந்திதேவரும் தன் சுய உருக்கொண்டார்.

5.கூலியாளாய் பிட்டுக்கு மண் சுமந்தமை: திடீரென்று பெருக்கெடுத்தோடும் வைகை ஆற்றின் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த வீட்டிற்கு ஒரு ஆள் அனுப்பவும் என்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதியை குறிப்பிட்டு அந்த எல்லைக்குண்டான கரையை அடைக்க வேண்டும் என்றும் பாண்டிய மன்னன் அரசானை பிரப்பித்தான். நகரக் குடிகள் சார்பாக பலதரப்பட்ட கூலியாட்கள் அவரவர் எல்லைக்குண்டான் வைகையாற்றின் கரையை சீர்படுத்த தொடங்கினர். நகரில் வாழ்ந்த வந்தி என்ற மூதாட்டிக்கு கரையை அடைத்திட கூலியாட்கள் கிடைத்திடவில்லை. வந்தி இறைவனிடம் முறையிட இறைவன் கூலியாளாக வந்து தான் செய்திடும் வேலைக்கு கூலியாக தான் அவித்து விற்கும் பிட்டைத் தந்தாள். விருப்பமுடன் பிட்டை அருந்திய கூலி ஆள் வந்தியின் எல்லைப் பகுதிக் கரையை அடைத்திடும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து வேலை செய்யாமல் அவ்வப்போது ஓய்வு கொண்டார். எல்லோருடைய எல்லைப் பகுதிக் கரைகளும் அடைக்கப்பட்ட நிலையில் வந்தியின் பங்கு மட்டும் சரியாக அடைக்கப் படவில்லை. அரசனுக்குத் தகவல் சென்றது. வந்து பார்த்த அரசன் கோபங்கொண்டு தன் கையில் இருந்த பொற்பிரம்பினால் அந்தக் கூலியாளின் முதுகில் அடித்தான். அந்த அடி தேவர், மானிடர் அனைவரின் முதுகிலும் பட அனைவரும் கலங்கினர். இறைவன் திருவிளையாடல் செயல் என உணர்ந்தனர்.

6.மடுவில் சோழனை வீழ்த்திய வேல்வீரன்: சுந்தரேச பாதசேகர பாண்டியன் சிவநேயம் கொண்டு சிவ கைங்காரியங்களில் ஈடுபட்டு ஆட்சி புரிந்து வந்தான். அதனால் தன்னுடைய நாட்டின் படை பலத்தைக் குறைக்க வேண்டியதாயிற்று. இதையறிந்த சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். பாண்டியன் சொக்கநாதரிடம் முறையிட பெருமான் தன் வேதப்பரிமீதேறி தன் கைவேலினை சுழற்றி போர் புரிந்தவாறு முன்னே சென்றதால் சோழப்படை புறமுதுகிட்டு ஓடியது. பின் சோழன் மீண்டும் பாண்டியனை எதிர்க்க பாண்டியன் மதுரையை நோக்கி விரைந்து செல்லும்போது மடுவில் விழ துரத்தி வந்த சோழனும் அதே மடுவில் விழுந்தான். பாண்டியனை பெருமான் கரையேற்றினார். சோழன் மடுவில் மாண்டான். சோழனது படைகளையும் பொன் பொருள்களையும் பாண்டியன் கைப்பற்றினான்.

7.சைவமுதியவர் வடிவம் தாங்கி வந்து இளைஞானக உருமாறால்: விக்கிரம பாண்டியன் காலத்தில் வாழ்ந்த விருபாட்சன்- சுபவிரதை என்ற தம்பதியர்க்கு குழைந்தைச் செல்வம் இல்லையாததால் பெருமானிடம் முறையிட ஓர் பெண் மகவு பிறந்தது. கௌரி எனப் பெயரிட்டு பருவம் வந்ததும் வைணவப் பிராமணனுக்கு மணம் செய்து வைத்தார்கள். கௌரி தன் தந்தை வீட்டிலிருந்த்து போலவே சிவ சிந்தனையுடன் இருக்க அவள் மீது அவளது மாமியாரும் மாமனாரும் கோபம் கொண்டனர். ஒருநாள் பக்கத்து ஊரில் இருக்கும் திருமணத்திற்கு கௌரியை மட்டும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு அனைவரும் சென்றனர். தனியே இருந்த கௌரி சிவனடியார் யாரையும் காணமல் மனம் கலங்கினார். சிவபெருமான் சைவமுதியவர் வேடம் கொண்டு வீட்டின் முன் நின்றார். அடியவரக் கண்டதும் உளமகிழ்ந்த கௌரி அவருக்கு தன்னால் அமுது படைத்திட முடிய வில்லையே என வருந்தியதை அறிந்த முதியவர் நீ தொட்டால் பூட்டுத் திறக்கும் எனச் சொல்ல அவ்வாறே சமையலறையின் பூடைத் திறந்து அமுது சமைத்து சைவ முதியவருக்கு அமுது படைத்தாள். அமுது உண்டதும் முதியவர் மூப்பு நீங்கி பேரழகுடன் கட்டுடல் கொண்ட இளம் வாலிபனாய் மாறினார். அச்சமயம் வேற்றூர் சென்றவர்கள் அனைவரும் திரும்பிவர இளைஞர் அழகிய சைவ குழைந்தையாய் மாறி அழுதது. மாமியார் ஏது இந்தக் குழந்தை எனக்கேட்க இது தேவதத்தனின் குழந்தை என்றாள் கௌரி. சைவக் குழந்தைமீது ஆசைக் கொண்டவளே எங்களுக்கு நீ வேண்டாம். குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வேளியில் போ என்று கூறி குழந்தையுடன் வெளியில் தள்ளி கதவை மூடினாள். வெளியே தள்ளப்பட்ட கௌரி என்ன செய்வது என அறியாமல் சிவனை நினைத்து சிவனை ஜபித்தாள். குழைந்தை மறைந்து பெருமான் வானில் காட்சி தந்து அருள்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:54

குதிரைச் சேவக வடிவம் இரண்டு!

ஓம்நமசிவய!

செம்பொன் மேனிச் செம்மால் போற்றி!
உம்பர் போற்றும் உம்பல் போற்றி!
பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ போற்றி!
எண்ணிய எண்ணியாங் கிசைப்பாய் போற்றி!
அப்பமும் அவலும் கப்புவாய் போற்றி!
முப்புரி நூல் மார்பு அப்பா போற்றி! போற்றி!

குதிரைச் சேவக வடிவம் இரண்டு!

1.சுந்தரசாமந்தனுக்கு அருளல்: குலபூஷண பாண்டிய மன்னன் சேனாபதி சுந்தரசாமந்தன் சிறந்த சிவபக்தன். சேதிராயன் என்ற குறுநில மன்னன் பாண்டிய நாட்டின்மீது படையெடுக்க பொக்கிஷசாலையிலிருந்து தேவையான பொன்னும் மணியும் எடுத்து புதிய சேனைகளைத் திரட்டுமாறு உத்தரவிட அச்செல்வத்தை சைவத் திருப்பணிகளுக்கு சேனாபதி செலவிட்டான். ஒருநாள் புதிய படை வீர்ர்களை அழைத்து வருமாறு பாண்டியன் கேட்க சேனாபதி கலக்கமடைந்தான். அவன் கலக்கத்தை தீர்க்க எண்ணிய பெருமான் தம் பூத கணங்களை வில் வீர்ர்களாக உருமாற்றி தானும் ஒரு குதிரை வீரனாக மாறி தன் காளையை குதிரையாக்கி நந்தி, மாகாளர், பிருங்கி, நிகும்பரன், கும்போதரன் ஆகியோர் குதிரை வீரகளாக புடைசூழ மதுரை வந்து மன்னனுக்கு அறிமுகப்படுத்தினார். இது சுந்தரசாமந்தனுக்காக குதிரைச் சேவகனாக வடிவம் கொண்டு அருள் புரிந்தமை ஆகும்.

2.மாணிக்கவாசகருக்காக நரிகளைப் பரிகளாக்கி குதிரைச் சேவகனாக அருளல்: அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்த திருவாதாவூரிடம் கடல் துறையில் வந்திருக்கும் நல்ல உயர்ந்த குதிரைகளை வாங்கி வர பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்ப, அச்செல்வத்தை திருவாதாவூரார் திருப்பெருந்துறை ஆலயப் பணிக்கு செலவிட்டார். செய்தி ஏதும் கிடைக்காததால் திருவாதாவூராருக்கு மன்னன் ஓலை அனுப்ப அதை சிவபெருமானிடம் முறையிட, அவர் ஆணைப்படி குதிரைகள் வந்து கொண்டிருப்பதாக தகவல் அனுப்பினார். குதிரைகள் வராததால் வாதாவூரார் சிறையில் அடைக்கப் பட்டார். சிரையில் இருந்தபடியே சிவனிடம் முறையிட பெருமான் குதிரைச் சேவகனாக உருக்கொண்டு நரிகளைப் பரிகளாக்கி, சிவகணங்களை வீர்ர்களாக்கி மதுரை அடைந்து மன்னனிடம் ஒப்படைத்து திருவாதாவூராரை சிறையிலிருந்து விடுவித்தார்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:51

வணிக வேடம் மூன்று!

ஓம்நமசிவய!

மழைபொழி இமயவல்லி சேய் போற்றி!
தழைசெவி எண்தோள் தலைவ போற்றி!
திங்கட் சடையோன் செல்வ போற்றி!
எங்கட்கு அருளும் இறைவா போற்றி!
ஆறுமுகச் செவ்வேட்கு அண்ணா போற்றி!
சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி! போற்றி!

வணிக வேடம் மூன்று!

1.வைசியர் வேடங்கொண்டு மாணிக்கம் விற்றமை:மதுரை மன்னன் வீரபாண்டியன் வேட்டைக்குச் சென்றபோது புலியால் கொல்லப்பட்டான். மன்னனின் காமக்கிழத்தியர் புதல்வர்கள் அரண்மணையில் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடினர். இளவரசனுக்கு முடி சூட்ட அமைச்சர் பொருள்கள் வைப்பறையைத் திறந்தபோது மணிமுடியும் முக்கிய பொன்னும் பொருளும் இல்லாமல் வருந்தி சொக்கநாதரிடம் முறையிட்டனர். பெருமான் இரத்தின வியாபாரியாக உருவெடுத்து முடிசூட்டிட வேண்டியதற்குரிய இரத்தினங்களை அளித்தார். அந்த இரத்தினங்கள் எல்லாம் வலன் என்ற அசுரனின் உடல் உறுப்புகளாகும் என்றார். 

எவராலும் என் உடல் பிளவு பட்டுக் கிடக்கக் கூடாது. அவ்வாறு இல்லாமல் ஊழ்வினையால் இறந்தால் துறவிகளும் விரும்பும் நவரத்தினங்களாக என் உடல் மாற வேண்டும் என்ற வரத்தினை பெருமானிடம் பெற்றவன். அவனை வெல்ல முடியாத இந்திரன் நட்பாக பேசி தான் செய்யும் யாகத்திற்கு வேள்விப் பசுவாக வர சம்மதிக்க வைத்தான். அப்படிவந்த வலனை கட்டிவைத்து மூச்சடக்கி கொன்றனர். வலன் இந்திர விமானத்திலே பிரம்மனின் சத்யலோகத்தை அடைந்தான். வேள்விப் பசுவாய் வந்து உயிர் நீத்த வலனின் இரத்தம்-மாணிக்கம், பற்கள்-முத்துக்கள், ரோமம்- வைடூரியம், எலும்பு-வைரம், பித்தம்-மரகதம், வெள்ளை நிணமே-கோமேதகம், தசை-பவளம், விழிகள்- நீலம், கோழை-புஷ்பராகம் என்றானது.

நவரத்தின்ங்களைக் கொடுத்து ஆசீர்வதித்து அபிஷேகப் பாண்டியன் எனப் பெயர் சூட்டினார் வணிகர். இளவரசர் முன்பு நின்றிருந்தவர் அந்தர் மயமானார். விடைமீது தோன்றி ஆசிர்வதித்தார். மகுடம் தயார் செய்து முடி சூட்டப்பட்டது.

2.வளையல் விற்கும் வணிகர்: பெருமானின் பிட்சாடனர் கோலத்தைக் கண்ட தாருகாவனத்து முனிவர்களின் மனைவியர் கற்பு நிலையிலிருந்து மாறியதால் முனிவர்கள் இட்ட சாபப்படி மதுரையில் வணிக குலப்பெண்களாகப் பிறந்தனர். அவர்கள்மீது கருணை காட்டிட வளையல் விற்கும் வணிகர்போல் உருமாறி வணிக மங்கையரின் கரங்களைப் பற்றி வளையல் இட்டு அவர்களின் சிந்தை கவர்ந்தார்.

3.தனபதி செட்டியாராக மாமனாகி வழக்குரைத்தமை: வனிகர் குல தனபதிக்கு குழந்தைப் பேறு இல்லாததால் தன் தங்கையின் புதல்வனை தனது அபிமானப் புத்திரனாக ஏற்று வளர்த்தார். தங்கையுடன் ஏற்பட்ட சண்டையால் தன் செல்வம் அனைத்தையும் தன் வளர்ப்பு புதல்வனுக்கு உரிமையாக்கி காட்டில் தவம் செய்ய சென்றார். தனபதியின் தாயதியர் வம்பு வழக்கு செய்து வளர்ப்பு மகனிடமிருந்து செல்வம் அனைத்தையும் எடுத்துக் கொண்டனர். தனபதியும் வளர்ப்பு மகனும் சோமசுந்தரரிடம் முறையிட்டனர். பெருமான் வனம்சென்ற தனபதி உருக்கொண்டு தரும சபையில் நடைபெற்ற வழக்கில் தனபதியின் மருமகனுக்கு ஆதரவாக வழக்குரைத்து தாயாதிகள் பறித்த செல்வம் அனைத்தையும் மீட்டுக் கொடுத்தார்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:37

குரு / ஆச்சார்ய வேடம் மூன்று!

ஓம்நமசிவய!

மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய் போற்றி!
கண்ணுள் மணியாய்க் கலந்தாய் போற்றி!
நீர்தீக் காற்றாய் நின்றாய் போற்றி!
கார் குளிராகக் கணிந்தாய் போற்றி!
பகலவன் நிலவாய்ப் பரந்தாய் போற்றி!
நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி! போற்றி!

குரு / ஆச்சார்ய வேடம் மூன்று!

1.16வயது அந்தனர் வேடமேற்று வேதத்தின் பொருள் அருளியமை: நைமிசாரண்யத்து முனிவர்கள்மீது கருணை கொண்டு 16வயது ஞானகுருவாக வடிவம் கொண்டு, இறைவனின் லிங்கவடிவத்தின் முன்பாக, வேதப் பொருளாக விளங்குவது சிவலிங்க வடிவமே. வேதம் வேறு. சிவலிங்கம் வேறன்று என்று வேதப் பொருளையும் சிவலிங்கத் தத்துவத்தையும் விளக்கியுரைத்தார்.

2.கார்த்திகைப் பெண்களுக்கு அட்டமாசித்தி உபதேசித்தல்: இறைவன் இட்ட சாபப்படி பட்டமங்கைத் தலத்தில் கற்பாறைகளாக மாறியிருந்த கார்த்திகைப் பெண்கள் அறுவர் முன்பாக பெருமான் ஞானாசிரிய வடிவம் கொண்டு அவர்கள் சாபவினை நீங்குமாறு தம் திருப்பார்வையை நல்கினார். சுய உருவம் அடைந்த கார்த்திகைப் பெண்களுக்கு அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிரகாம்யம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எண்வகை சித்திகளை ஞானாசிரியராக உபதேசித்தார்.

3.வாதாவூராருக்கு உபதேசித்தமை:அரிமர்த்தன பாண்டியன் அமைச்சரான திருவாதாவூரர் அரசாணைப்படி கடல் துறையில் வந்திறங்கும் குதிரைகளை வாங்கச் செல்லும் வழியில் ஆட்கொள்ள திருவுள்ளம் கொண்ட பெருமான் வேதியர் குலத்தின் குருவாக வடிவம் கொண்டு திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் எழுந்தருளினார். தம் ஞானக்கண்ணல் வாதாவூராரின் மும்மலங்களையும் அவரது பாசபந்தத்தையும் போக்கி பேரின்ப நிலையினை எய்த திருவருள் புரிந்தார்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:37

சித்தர் வேடம் மூன்று!

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் போற்றி!
பூமெனும் பொருள் தொறும் பொலிவாய் போற்றி
அகரம் முதலென ஆனாய் போற்றி!
அகர உகர ஆதி போற்றி!
மகரமாய் நின்ற வானவ போற்றி!
பகர்முன்னவாம் பரமே போற்றி! போற்றி!

சித்தர் வேடம் மூன்று!

1.எல்லாம் வல்ல சித்தர் வடிவம்: அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்து வந்த காலத்தில் எல்லம் வல்ல சித்தராக சோமசுந்தரக் கடவுள் மதுரை வீதிகளில் உலா வந்தார். கடைவீதி, சித்திரச் சாலை, நாற்சந்தி, முச்சந்தி என அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் தோன்றி அற்புதங்களை நிகழ்த்தினார். அப்போது கல்யானை ஒன்றிற்கு உயிரூட்டி கரும்பைக் கடித்து சுவைத்து தின்னவைத்த நிகழ்வு சிறப்பாகும்.

2.வைகையை வற்றச் செய்தமை: சிவபக்தனான காடுவெட்டிச் சோழன் மதுரை சொக்கநாதப் பெருமானை தரிசிக்க பேரவா கொண்டான். இறைவனிடம் தன் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டினான். சிவபெருமான் சித்தராக உருவெடுத்து வைகை ஆற்றை வற்றிப்போக வைத்து, மதுரைக் கோட்டை வாயிலைத் திறந்து சோழனை சொக்கநாதரையும் மீனாட்சியையும் தரிசிக்கச் செய்து திரும்பவும் வைகை ஆற்றின் வடகரையில் சேர்த்தார். பின்னர் திரும்பி வந்து கோட்டை வாயிலை மூடி தன் விடை இலச்சினையை வைத்து மறைந் தருளினார்.

3.பொன்னையாள் இல்லத்தில் இரசவாதம் செய்தல்: திருப்பூவனத்தில் தோன்றிய சிவபக்தையான பொன்னையாளின் மனத்தில் திருப்பூவனநாதரின் திருப்படிமத்தை நிறுவ ஆசைகொண்டார். திருக்கோவிலில் இசைபாடி நடனமாடுவதால் கிடைக்கும் அனைத்தையும் சிவபூஜைக்கே செழவழித்து வந்தாள். அவள் எண்னத்தை நிறைவேற்ற சித்தர் வேடங்கொண்டு பெருமான் பொன்னையாள் இல்லம் சென்று இரசவாதத்தால் அவள் வீட்டிலிருந்த இரும்பு, செம்பு, பித்தளை பாத்திரங்களை பசும் பொன்னாக்கி மறைந்தார். பொன்னைக் கண்ட பொன்னையாள் இறைவனின் திருவிளையாடல் என்றெண்ணி பூவனநாதரின் திருவுருவை பொன்னால் செய்வித்து நிறுவி விழா எடுத்தாள்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:28

வேடுவ வேடம் மூன்று!

ஓம்நமசிவய!

மேவியொளிர் சரணே போற்றி!
மததாரை விரவியதிண் கபோலனே போற்றி!
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

வேடுவ வேடம் மூன்று!

1.யானையைச் சாய்த்தமை: சோழ மன்னன் சமண சமயத்தைச் சார்ந்திருந்ததால் சைவ சமயத்தை சார்ந்த பாண்டிய மன்னன் விக்ரம பாண்டியனைக் கொல்ல சமணக் குரவர்கள் எட்டாயிரம் பேரை அழைத்து அபிசார வேள்வி நடத்த அதிலிருந்து ஒரு பெரிய கரிய யானை வெளிப்பட மதுரையையும் பாண்டியனையும் அழிக்க ஏவினர்.
இதையறிந்த பாண்டியன் மதுரையும் தன்னையும் காப்பாற்ற இறைவனை வேண்ட வேடுவன் உருவில் வந்து யாணையை நரசிங்க கணையால் கொன்றார்.

2.வேட்டுவச்சியாகத் தோன்றி மாபாதகம் தீர்த்தமை: அவந்தி நகர வேதியனின் மகன் சிறு வயது முதலே தகாத செயல்கள் செய்து வந்தான். இளம் வயதில் காமம் மிகுந்தவனாய் பேரழகுடன் விளங்கிய தன் தாயுடன் தகாத உறவு வைத்திருந்தான். இதற்கு தந்தை இடைஞ்சல் என்று தந்தையைக் கொன்றான். வீட்டில் இருந்த பொருள்களுடன் தன் தாயுடன் காட்டு வழி வேறு ஊருக்குச் செல்லும்போது வழிப்பறிக் கொள்ளையர்கள் அவர்களிடமிருந்த பொருள்களைக் பறித்துக் கொண்டு, அழகியாக இருந்த வேதியனின் மனைவியையும் இழுத்துச் சென்றனர். தனியனாக இருந்த அவனை பிராமணக் கொலை தந்தைக் கொலை ஆகிய மாபாதகப் பழி பிடித்து துன்புறுத்த மதுரைவந்த அவன் மிகவும் வருந்தி சொக்கநாதரிடம் அழுது புலம்பினான். வேடுவர் வேட்டுவச்சியாக வந்த பெருமானும் மீனாட்சியும் அவன்மீது இரக்கம் கொண்டு அவனுக்கு நல்வழி காட்டினர். விரதங்கள் மேற்கொண்டு சிவத் தொண்டு செய்து தான் மாபாதகச் செயல்களுக்கு பரிகாரம் செய்துகொண்டான்.

3.வேடனாக சுந்தரப் பேரம்பு எய்தமை: பாண்டிய நாட்டைக் கைப்பற்ற சோழன் படையெடுக்கும்போது சிவபெருமான் வேட மன்னராக வடிவம் கொண்டு பாண்டியப் படைக்குத் தலைமை பொறுப்பேற்று சுந்தரேசன் என்ற அம்பினை பகைவர்மேல் விடுத்து சோழப்படையையும் அவனுக்குத் துணை நின்ற வடபுலத்து வேந்தர் படைகளையும் நிர்மூலமாக்கி வங்கியசேகர மன்னனுக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:19

புலவர் வடிவம்-நான்கு!

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே போற்றி!
சிறந்தொளிரும் மங்கள சொரூபனே போற்றி!
ஓவறு சித்திகளனைத்தும் உதவுவோய் போற்றி!
ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்

புலவர் வடிவம்-நான்கு!

1.இசை வாதி வெற்றி: பாண்டிய நாட்டை இராசராச பாண்டியன் ஆண்ட காலதில் ஈழத்து பாடினிக்கும் பாணபத்திரரின் இல்லாளுக்கும் அரசவையில் நடந்த இசைப் போட்டியில் ஒரு தலைப் பட்சமாக ஈழத்து பாடினியை மன்னன் புகழ்ந்தான். அடுத்த நாள் சொக்கப் பெருமான் சன்னதியில் நடந்த போட்டியில் சோமசுந்தரப் பெருமான் பெரும் புலவராக வேடமேற்று மன்னனின் உளக் கொடுமைதனை நீக்க, தெளிவு பெற்ற மன்னன் பிறகு நடந்த இசைப் போட்டியில் சீர்தூக்கி ஆராய்ந்து நடுநிலையான தீர்ப்பை வழங்கி பாணபத்திரரின் மனைவி வென்றதாக அறிவித்தான்.

2.சங்கப் பலகை கொடுத்தது: மதுரையில் நீதி வழுவாது ஆட்சி புரிந்த வங்கியசேகர பாண்டியன் ஆட்சியில் சிவனார் புலவர் வேடமேற்று பிற புலவர்களின் திறமையை அளக்கும் கருவியாக சங்கப் பலகையை வழங்கி, மதுரைச் தமிழ் சங்கத்திற்குத் தலைமை ஏற்றிருந்தார்.

3.புலவர் தருமிக்கு பாடல் அருளுதல்: செண்பகப் பாண்டியனின் ஐயப்பாடான, ‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கையான மணம் உண்டா!” என்பதைத் தீர்க்கும் விதமாக பாட்டெழுதி தருமி என்ற ஏழை புலவரிடம் கொடுத்து அரசவைக்கு அனுப்ப, மன்னன் சந்தேகம் தீர்ந்த போதும் நக்கீரர் குறுக்கிட்டு பாட்டில் குற்றம் உள்ளது எனக்கூறியதால், பொற்கிழியை பெறாமல் திரும்பிய தருமியைக்கண்ட சோமசுந்தரர் தானே புலவராக தருமியுடன் அரசவைக்கு வந்து நக்கீரனுடன் வாதிட ‘பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணம் கிடையாது என்று உறுதியாக வாதிட்ட நக்கீரரை, தன் நெற்றிக் கண்ணால் சுட நக்கீரர் அருகிலிருந்த பொற்றாமரைக் குளத்தில் மூழ்கினார். அனைவரும் வணங்க காட்சி கொடுத்து நக்கீரரை பொற்றாமரைக் குளத்திலிருந்து கரையேற்றி சங்கப்புலவர் கூட்டத்தில் இடம்பெறச் செய்து தருமிக்கு பொற்கிழியைப் பெற்றுத் தந்தார்.

4.உருத்திரசருமன் பிறப்பு பற்றிக் கூறல்: மதுரை தமிழ் சங்கத்தில் உள்ள நாற்பத்தெட்டு பேரின் உருத்திரசருமன் பற்றிய மனவேறுபாட்டை நீக்க ஒரு புலவராகத் தோன்றி, தனபதியின் குமாரன் உருத்திரசருமன், முருகனின் திரு அவதாரம், உங்களின் செய்யுட்களின் சொல்லழகு, பொருளாழம், ஆகியவற்றை தன்னுடைய நுண்ணறிவால் சிறந்ததை தேர்வு செய்வான். உங்களுக்குள் கலகம் மறைந்து நட்பு மலரும் என திருவாய் மலர்ந்தருளினார்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27100569
All
27100569
Your IP: 3.145.183.137
2024-04-28 03:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg